ஜட்டி விற்பனை சரிவு: பொருளாதாரத்துக்கு முதல் எச்சரிக்கை !!
ஒரு நாட்டின் பொருளாதாரத்தைக் கணிக்கவும், ஆய்வு செய்யவும் பல காரணிகள், பல அளவுகோல்கள் உள்ளன.
சின்னச் சின்ன விஷயங்கள் கூடப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணியாக உள்ளது, இதற்கு முக்கியமான காரணம் அனைத்து பொருட்களின் விற்பனையும் மக்களின் வருமானத்தின் அடிப்படையில் உள்ளது.
இந்த வர்த்தகத்தின் அடிப்படையில் தான் ஒரு நாட்டின் பொருளாதாரம் அமையும். அந்த வகையில் அமெரிக்க மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான ஆலன் கிரீன்ஸ்பான் ஆண்களின் உள்ளாடை அதிலும் குறிப்பாக ஜட்டி விற்பனை பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோல் எனக் கூறுகிறார்.
இந்த நிலையில் இந்தியாவில் ஆண்கள் பிரிவு உள்ளாடைகள் நிறுவனங்கள் நிஃப்டி சந்தையில் மிகவும் மோசமாகச் செயல்படுகிறது, இதனால் இதை இந்திய பொருளாதாரம் குறித்த அச்சமாகவும் பார்க்கப்படுகிறது.
நிஃப்டி 50-யில் கடந்த ஒரு வருடத்தில் உள்ளாடை நிறுவனங்கள் மோசமாகச் செயல்பட்டு வருகிறது. ரூபாய் அண்ட் கோ 51 சதவீதம் சரிவு, லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 50 சதவீதம் சரிவு, பேஜ் இண்டஸ்ட்ரீஸ் 7 சதவீதம் சரிவடைந்துள்ளது. இது தத்தம் நிறுவனங்களின் உள்ளாடை விற்பனையிலும் எதிர்ரொலிக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் பொருளாதாரத்தில் ஏதோ சரியாக இல்லை என்பதற்கான சிக்னலாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான ஆலன் கிரீன்ஸ்பான் ஏன் உள்ளாடை விற்பனை பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய அளவுகோலாக உள்ளது எனக் கூறுகிறார் என்றால் இது அனைத்து ஆண்களுக்கும் மிகவும் முக்கியமான ஒன்று, அதேபோல் இதை விலைக்கு ஏற்றார் போல் சரிய சைஸ் போன்றவற்றைப் பயன்படுத்த முடியாது, எனவே இது கட்டாயம் மக்கள் வாங்கும் விஷயமாக உள்ளது என நம்புகிறார்.
ஆண்கள் உள்ளாடை விற்பனை குறைகிறது என்றால் பொருளாதாரம் ரெசிஷன் அல்லது சரிவை நோக்கி செல்கிறது என்று பொருள். இந்த நிலையில் இந்தியாவில் உள்ளாடை விற்பனை அல்லது பயன்பாடு 55 சதவீதமாகச் சரிந்துள்ளது, இது பெரும் தலைவலியாக மாறியள்ளது.
அமெரிக்க மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான ஆலன் கிரீன்ஸ்பான் அன்றைய வேலைவாய்ப்பு சந்தை மற்றும் பணம் ஈட்டும் சமுகத்தை வைத்து இது கணக்கிட்டு உள்ளார். ஆனால் இன்று வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புச் சமூகத்தில் பெரிய மாற்றம் எற்பட்டு உள்ளது.
இன்றைய வேலைவாய்ப்பு சந்தையிலும், பணம் ஈட்டும் சமூகத்தில் இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் பெண்களின் பங்கீடு மிகவும் அதிகமாக இல்லை. இதனால் ஆலன் கிரீன்ஸ்பான் கணக்கீட்டு முறையில் மாற்றம் செய்து ஆண்கள் உள்ளாடை விற்பனை மட்டும் கணக்கெடுக்காமல் பெண்கள் உள்ளாடை விற்பணையில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது பொருளாதார வளர்ச்சி அளவுகோளில் கட்டாயம் மாற்றத்தை ஏற்படுத்தும்.