ஹாங்காங்கில் 945 நாட்களுக்கு பின் முகக்கவசம் கட்டாயம் வாபஸ்!!
ஹாங்காங் நாட்டில் 945 நாட்களுக்கு பின்னர் முகக் கவசம் கட்டாயம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. உலக நாடுகள் கொரோனா காலத்தில் முககவசம் அணிவதை கட்டாயமாக்கின. அந்த வகையில் ஹாங்காங் நாடும் பொது இடங்களில் முகக்கவசங்களை அணிவதை கட்டாயப்படுத்தியது. தற்போது கொரோனா அச்சம் நீங்கிய நிலையில் பல நாடுகளும் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கவில்லை.
இந்நிலையில் ஹாங்காங் நாட்டின் தலைவர் ஜான் லீ வெளியிட்ட அறிவிப்பில், ‘பொது இடங்களில் இனிமேல் முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை. சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார். உலகிலேயே அதிக நாட்கள் அதாவது 945 நாட்களுக்குப் பிறகு, ஹாங்காங்கில் முகக் கவசம் கட்டாயம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.