;
Athirady Tamil News

50.6% ஆக குறைந்தது முதன்மைப் பணவீக்கம் !!

0

2023 ஆம் ஆண்டு ஜனவரியில் 51.7 சதவீதமாக இருந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்படும் முதன்மைப் பணவீக்கம் பெப்ரவரியில் 50.6 சதவீதமாக குறைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விவரத் திணைக்களம் தெரிவித்தது.

2023 ஜனவரியில் 60.1 சதவீதமாகக் குறைந்திருந்த உணவுப் பணவீக்கம் பிப்ரவரியில் 54.4 சதவீதமாக மேலும் குறைந்துள்ளது.

மேலும், உணவு அல்லாத வகையின் பணவீக்கம் 47.9 சதவீதத்திலிருந்து இந்த மாதம் 48.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் ஆகிய இரண்டினதும் அடிப்படையிலமைந்த ஆண்டுக்கு ஆண்டு முதன்மை மற்றும் மையப் பணவீக்கமானது எதிர்பார்க்கப்பட்ட வாறு தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக 2022 டிசெம்பரில் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.