அமெ. டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வு!!
இலங்கை மத்திய வங்கியினால் புதன்கிழமை (01) வெளியிட்ட நாணய மாற்று விகிதத்துக்கு அமைய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சாதனை உயர்வை எட்டியுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 351.72 ரூபாயாகவும் விற்பனை விலை 362.95 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு மே 4ஆம் திகதிக்கு பின்னர் பதிவாகிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் குறைந்த பெறுமதி என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (28) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357.68 ரூபாயாகவும் விற்பனை விலை 366.92 ரூபாயாகவும் பதிவாகி இருந்தது.
இதேவேளை, பெப்ரவரி 01ஆம் திகதி 371 ரூபாயாகக் காணப்பட்ட அமெரிக்க டொலரின் விற்பனை மார்ச் 01 ஆம் திகதியன்று 362.95 ரூபாயாக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.