கொடூர உயிர் பலிக்கு காரணம் சீனாவே – உடைந்தது மர்மம்; உறுதிப்படுத்தியது அமெரிக்க எஃப்.பி.ஐ! !
உலகில் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை பறித்த கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்தே பரவியது என அமெரிக்காவின் எஃப்.பி.ஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே உறுதிப்படுத்தி இருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கியதுடன், ஏராளமான மக்களை பாதித்து பல இலட்சக்கணக்கான உயிர்களும் பறிபோயிருந்தன.
கொரோனாவின் பாரிய தாக்கம் சீனாவை மட்டுமன்றி, இந்தியா உட்பட ஏனைய உலக நாடுகளையும் மிகப்பெரிய அளவில் பாதித்தது. அவ்வாறான நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து, சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரப்பப்பட்டது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது.
இவ்வாறான நிலையில் அதனை சீனா முற்றாக மறுத்தும் வந்தது. எனினும் சீனாவின் வூஹானில் இருந்தே கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவியது என தற்போது, அமெரிக்காவின் எஃப்.பி.ஐ உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சீனாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் வூஹான் நகரத்தையே தாக்கியதாகவும், அங்குள்ள ஆய்வு கூடம் ஒன்றில் இந்த வைரஸ் குறித்து ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனை செய்துகொண்டு இருந்தபோது அது வெளியேறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது.
அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் பல இந்த குற்றச்சாட்டை முன்வைத்தன. எனினும் சீன அரசாங்கம் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. விசாரணை அமைப்பு இது தொடர்பான தீவிர விசாரணையில் இறங்கியது.
அவ்வாறான தீவிர விசாரணையின் பயனாக, சீனாவின் வூஹானில் உள்ள ஆய்வு கூடத்தில் கொரோனா வைரஸின் மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டன என எஃப்.பி.ஐ. இயக்குநர் கிறிஸ்டோபர் ரே உறுதிபடுத்தி இருக்கிறார் என எஃப்.பி.ஐ. யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து எஃப்.பி.ஐ. இயக்குநர் கிறிஸ்டோபர் ரே தெரிவித்து இருப்பதாவது,
“இதற்கு எஃப்.பி.ஐ, சற்று காவல் எடுத்துக்கொண்டது. சீனாவில் உள்ள வூஹான் ஆய்வகத்தில் ஏற்பட்ட வைரஸ் கசிவின் காரணமாகவே கொரோனா வைரஸ் வெளி உலகிற்கு பரவி இருப்பதை தற்போது கண்டுபிடித்துள்ளோம்.
கொரோனா வைரஸின் தோற்றம் வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் தொடங்கியுள்ளது. இங்கு அமெரிக்க அரசும், நமது நட்பு நாடுகளும் மேற்கொண்டு வரும் விசாரணையை தடுக்கவும், மழுங்கடிக்கவும் சீன அரசு தன்னால் இயன்றதை செய்து வருகிறது” என்று தனது 5 பக்க விசாரணை அறிக்கையில் அவர் தெரிவித்திருக்கின்றார்.
இந்த விசாரணை அறிக்கையை அமெரிக்க காங்கிரஸ் கோரவில்லை. ஆனால், அமெரிக்காவில் குடியரசு கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட் சபை உறுப்பினர்கள் தங்கள் சொந்த விசாரணையை நடத்துவதாகவும், கூடுதல் தகவல்களை வெளியிடக்கோரி ஜோ பைடன் அரசு மற்றும் அந்நாட்டு உளவுத்துறைக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
எஃப்.பி.ஐயுடன் ஆற்றல் துறையும் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதா என்பது குறித்து ஆய்வு செய்யும் விசாரணையில் இணைந்து இருப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜோர்னல் ஊடகம் குறிப்பிட்டு இருக்கிறது.
அந்நாட்டின் ஆற்றல் துறை அதிகளவிலான அறிவியல் நிபுணத்துவம் கொண்டது. அமெரிக்காவில் மேம்பட்ட உயிரியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் இந்த துறை அங்குள்ள தேசிய ஆய்வகங்களை மேற்பார்வையிடும் பணியையும் செய்து வருகிறது.
ஏற்கனவே அமெரிக்கா – சீனா இடையே நீட்டித்த மோதல் போக்கு கொரோனா பரவலுக்கு பின் மேலும் அதிகரித்தது. அமெரிக்க அரசும் அந்நாட்டு அதிகாரிகளும் தொடர்ந்து சீனா மீது குற்றம்சாட்டி வந்தார்கள்.
அதேபோல் இந்த ஆய்வில் ஈடுபட வந்த உலக சுகாதார நிறுவனத்துக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை சீனா விதித்திருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.