திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சாஹா 832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!!
திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16-ம் தேதி தேர்தல் நடந்தது. திரிபுராவில் 90 சதவீத வாக்குகள் பதிவாகின. இன்று காலை 8 மணிக்கு திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும், இடைத்தேர்தல் நடந்த 5 மாநிலங்களின் 6 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இதில், திரிபுரா மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி 40 இடங்களுக்கும் மேல் முன்னிலை பெற்றுள்ளது.
பாஜக- திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கூட்டணி 30 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், பாஜக சார்பில் டவுன் போர்டோவாலி தொகுதியில் போட்டியிட்ட திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சாஹா 832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார். திரிபுரா , நாகாலாந்து ஆளும் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.