ஊடகவியலாளர் தொடர்பிலான விடயங்களில் அக்கறை காட்டாமல் செயற்படும் யாழ்.மாவட்ட செயலகம்.!!
யாழ். மாவட்டத்தில் பல ஊடகவியலாளர்கள் ஊடகப் பணியாற்றி வரும் நிலையில் பலரது விபரங்களை உள்ளடக்கம் செய்யாமல் சிலரது விவரங்களை பதிவு செய்து அவர்களுக்கு மட்டும் அழைப்பை ஏற்படுத்தி வரும் ஊடகப் பிரிவொன்று இயங்கி வருகிறது.
தென்பகுதியில் இருந்து யாழ். வரும் அதிகாரிகளைச் சந்தித்து தமது பிரச்சினைகளை தெரியப்படுத்தும் ஊடகவியலாளர்கள், மாவட்ட செயலகம் தம்மை எப்படி கையாளுகிறது என்பதை அறிய முடியாமல் உள்ளனர்.
கச்சதீவு பயணம் ஊடகவியலாளர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கும் யாழ்.மாவட்ட செயலகம் யாழ். மாவட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் அக்கறையில்லாமல் இருக்கிறது.
கச்சதீவு செல்லும் ஊடகவியலாளர்களின் பெயர் விபரம் கொழும்பில் இருந்து வந்ததாக சொல்லும் யாழ்.மாவட்ட செயலகம், யாழ்.மாவட்ட ஊடகவியலாளர் தொடர்பில் அக்கறை கொள்ளவில்லை என்பது பல கேள்விகளை எழுப்புகிறது.
புதிதாக வந்த அரச அதிபர் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசினால் ஏதாவது செய்தியாக வெளிவந்து தனக்கு பிரச்சினையை கொடுக்கும் என்று நினைக்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது.
ஊடகவியலாளர் தொடர்பில் முழுமையான பதிவுகளை மேற்கொண்டு ஒருவரையும் விடாமல் அழைப்பை ஏற்படுத்தவும். அப்பொழுதுதான் செய்திகள் தொடர்பில் விமர்சிக்கும் அளவுக்கு உங்களை இட்டுச் செல்லாது என்பது உண்மை.