;
Athirady Tamil News

தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்- காரணம் என்ன? !!

0

தமிழகத்தில் வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அதீத காய்ச்சல், உடல் சோர்வால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: * காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்.

* காய்ச்சல், தொண்டை வலி அதிகரிக்க வழக்கமான வைரஸ் பாதிப்புகளில் ஏதேனும் உருமாற்றங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. * காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீத பேருக்கு influenza வைரஸ் பாதிப்பு உள்ளது. இது உயிர்க்கொல்லி வைரஸ் அல்ல, மக்கள் அச்சப்பட வேண்டாம். * காய்ச்சல் இருந்தால் சொந்தமாக மருந்து எடுத்து கொள்ளாமல் மருத்துவரை அணுக வேண்டும். * கோடையில் குறைய தொடங்கும் காய்ச்சல் பாதிப்புகள், நடப்பாண்டில் மார்ச் மாதம் பிறந்தும் தொடர்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.