;
Athirady Tamil News

கச்சதீவு பெருவிழா இன்றும் நாளையும்!!

0

கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா இரு நாட்களுக்கு இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாண ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இன்றும் (03) நாளையும் (04) நடைபெறவுள்ளது.

யாழ்.மாவட்டப் பொறுப்பாளர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் கச்சத்தீவு மகா மாங்கல்யத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.

கச்சத்தீவு திருவிழாவிற்கு சுமார் 1,000 இந்திய பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்காக போக்குவரத்து, குடிநீர், சுகாதார வசதிகள், தற்காலிக அறைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் கடற்படையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான இன்றைய இரவு உணவு, நாளைய காலை உணவு மற்றும் மீள் பயணத்திற்கான சிற்றுண்டி என்பன வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இவ்விழாவில் பங்குபற்றும் இலங்கை பக்தர்களுக்காக யாழ்ப்பாணம் குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து இன்று கடற்படை படகு சேவையை நடாத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.