மாதவிடாய்க்கு விடுமுறை – பெண்களுக்காக நிறைவேறிய புதிய சட்டம் !!
பெண்களுக்கு ஊதியத்துடன் மாதவிடாய் விடுமுறை அளிக்கும் முதல் ஐரோப்பிய நாடாக ஸ்பெயின் பெருமை பெற்றுள்ளது.
ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் கருக்கலைப்பு மற்றும் திருநங்கைகளின் உரிமைகள், பாலியல் மற்றும் இனப்பெருக்க உரிமைகளுக்கான சட்டங்கள் தொடர்பான அமர்வில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பில் அமைச்சர் ஐரீன் மான்டெரோ கூறுகையில், பெண்களின் ஆரோக்கியத்திற்கு, இந்த முடிவு முக்கியமானது.
இந்தச் சட்டம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை எடுப்பதற்கான உரிமையை வழங்குகிறது.
மாதவிடாய் விடுப்புக்கு அரசாங்கம் நிதியுதவி அளிக்கும்” எனக் கூறியுள்ளார்.
சிறந்த சட்டத்தை நிறைவேற்றியதால் பல நாடுகள் ஸ்பெயினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.