உக்ரேனில் பகைமையை முடிவுக்கு கொண்டுவருவதில் இந்தியா முக்கிய பங்காற்றும் – இத்தாலிய பிரதமர் மெலோனி!!
உக்ரேனில் அமைதிக்கான போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை செயல்முறையை எளிதாக்குவதில் ஜி-20 தலைவர் என்ற முறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்று இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் பிற துறைகளில் இந்தியாவுடனான தமது கூட்டாண்மையை வலுப்படுத்துவதை இத்தாலி நோக்கமாக கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜி-20 தலைவர் பதவியானது உக்ரைனில் போர்களை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை செயல்முறையை எளிதாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
பலதரப்பு சமூகத்தை ஒன்றாக வைத்திருப்பது முக்கியம். மேலும், இந்திய பிரதமர் அதை இன்னும் அதிகமாக செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
உலகம் முழுவதும் மிகவும் விரும்பப்படும் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். ஜி-20 உச்சிமாநாட்டுக்கான எங்களது ஒத்துழைப்பினூடாக அவர் எங்களை நம்பலாம்.
இதன் மூலம் எங்களது உறவை மேம்படுத்த அவதானித்துள்ளோம். நாங்கள் மிகவும் உறுதியான உறவை கொண்டிருப்பதால், எங்கள் கூட்டாண்மையை ஒரு மூலோபாய கூட்டாண்மையாக மாற்ற முடியும்.
உலகளாவிய ரீதியில் தெற்கின் நாடுகளது செயல்முறையில் நாங்கள் நிச்சயமாக உதவ விரும்புகிறோம்.
உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு முழு ஆதரவை வழங்குவோம். பிரதமர் மோடி அடைந்துள்ள அங்கீகாரம் மற்றும் மதிப்புக்கு பாராட்டுக்களை கூறுகிறோம்.
அவர் உலகம் முழுவதும் மிகவும் விரும்பப்பட்டவர் என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு முக்கிய தலைவர் என்பதை இதனூடாக நிரூபித்துள்ளார் என்ற கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை பற்றி இத்தாலிய பிரதமர் குறிப்பிடுகையில்,
இது கிட்டத்தட்ட 15 பில்லியன் யூரோக்களை எட்டியுள்ளது.
இந்தோ-பசுபிக் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ள மத்திய தரைக் கடலில் தீவிர நடவடிக்கையை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றார்.
அத்துடன் இந்தியா மற்றும் இத்தாலி இடையே உள்ள ஒற்றுமைகளை வலியுறுத்திய பிரதமர் மெலோனி, ‘எங்களுக்கு பல ஒற்றுமைகள் உள்ளன. நாங்கள் இரண்டு தீபகற்பங்கள். நாங்கள் 2000 ஆண்டு பழைய மரபுகளை கொண்டவர்கள்’ என்றும் கூறினார்.