திருப்பதி கோதண்டராமர் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 20-ந்தேதி தொடங்குகிறது!!
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருகிற 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. விழா நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் சிறு புத்தகங்கள் வெளியிடும் நிகழ்ச்சி திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் இணை அதிகாரி வீரபிரம்மன் பங்கேற்று சுவரொட்டிகள், சிறு புத்தகங்களை வெளியிட்டார். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 17-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், 19-ந்தேதி பிரம்மோற்சவத்துக்காக அங்குரார்ப்பணம் நடக்கிறது.
வாகனச் சேவை தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9.30 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரையிலும் நடக்கின்றன. இதேபோல் ராமநவமி விழா 30-ந்தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 1-ந்தேதி வரையிலும், தெப்போற்சவம் ஏப்ரல் மாதம் 3-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரையிலும் நடக்கிறது.