மலேசியாவில் கனமழை: 40,000 மக்கள் வெளியேற்றம்!!
மலேசியாவின் தெற்கு ஜொகூர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சுமார் 40,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். அவர்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது பெய்து வரும் மழை காரணமாக சிங்கப்பூரின் எல்லையை ஒட்டியுள்ள 40 மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜொகூர் மற்றும் பிற பகுதிகளில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. வீடுகள், சாலைகளில் வெள்ளம் புகுந்தது. கார்கள் நீரில் மூழ்கியுள்ளன வீடுகள் சேதமடைந்துள்ளன. மீட்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.