;
Athirady Tamil News

பெண்கள் அதிகம் வரதட்சணை கேட்பதால் ‘சிங்கிள்’ பசங்க எண்ணிக்கை அதிகரிப்பு: சீன அரசு நூதன பிரசாரம்!!

0

சீனாவில் பெண்கள் அதிகம் வரதட்சணை கேட்பதால் சிங்கிள் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சீனாவின் மக்கள்தொகை பிரச்னைக்கு மத்தியில், திருமணங்கள் குறைந்து வருகின்றன. பிறப்பு விகிதம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதே நிலை நீடித்தால், நாட்டின் மக்கள் தொகை வெகுவாக குறையும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் சமீபகாலமாக வரதட்சணை கொடுமை அரசுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.

பெண்கள் அதிகளவில் வரதட்சணை கேட்பதால் இளைஞர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதனால் அவர்கள் திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். முக்கிய நகரங்களில், 25 – 30 வயதிற்குட்பட்ட தனித்து வாழும் இளைஞர்கள் (சிங்கிள்) எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சி மாகாண எழுத்தாளர் ஃபெடரிகோ கியூலியானி எழுதியுள்ள சமூக வலைதள பதிவில், ‘அதிகப்படியான வரதட்சணை கேட்கும் பழக்கத்தை ஒழிக்கவும், ஆடம்பர திருமணத்தை தவிர்க்கவும் சீன அரசு முயற்சிகளை தொடங்கியுள்ளது. இந்த நடைமுறையை பின்பற்றுமாறு இளம் பெண்களை அரசு கேட்டுக் கொள்கிறது.

பழங்கால வழக்கத்தை பின்பற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. அதனால் 20 முதல் 30 வயதுடைய இளம் பெண்கள் தங்கள் திருமணத்தின் போது கார்கள், வீடுகள், பணத்தைக் கேட்க மாட்டோம் என்று சபதம் எடுத்து வருகின்றனர். இவ்வாறு செய்வதால், குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.