இந்திய விமானத்தில் நூதன முறையில் கடத்தப்பட்ட தங்க கட்டிகள்!!
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச (IGI) விமான நிலையத்தில் உள்ள சர்வதேச விமானத்தின் கழிப்பறையிலிருந்து சுமார் 2 கோடி மதிப்புள்ள நான்கு தங்கக் கட்டிகளை சுங்க அதிகாரிகள் மீட்டனர்.
IGI விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் பெறப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட உள்ளீட்டின் அடிப்படையில், சர்வதேச பயணங்களுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு விமானம், புதுடில்லியில் உள்ள IGI-ன் டெர்மினல் 2-ல் அதன் அடுத்தடுத்த உள்நாட்டு பயணங்களை முடித்தவுடன் எப்போதும்போல சோதனையிட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த விமானத்தை சோதனை செய்தப்போது, சுங்க அதிகாரிகள், கழிவறையில் பொருத்தப்பட்டிருந்த மடுவுக்கு கீழே டேப் ஒட்டப்பட்ட சாம்பல் நிற பையை மீட்டனர்.
அந்த சாம்பல் நிற பையில் கிட்டத்தட்ட 4 கிலோ (3969 கிராம்) எடையுள்ள நான்கு செவ்வக தங்கக் கட்டிகள் இருந்தன செவ்வக வடிவிலான தங்கக் கட்டிகளின் விலை இந்திய மதிப்பில் ரூ.1,95,72,400 என மதிப்பிடப்பட்டுள்ளது. (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.8 கோடி)
1962 ஆம் ஆண்டு சுங்கச் சட்டம் பிரிவு 110 இன் கீழ், அதன் பொதிப் பொருட்களுடன் மீட்கப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.