;
Athirady Tamil News

பூரு மூனாவுக்கு அடைக்கலம் வழங்கிய தம்பதி கைது!!

0

ஹங்வெல்ல பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளரை கொலை செய்தமை உட்பட 13 கொலைகளுடன் தொடர்புடைய, “பூரு மூனா” என்ற சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்த பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த கணவன் – மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

“பூரு மூனா” என்ற சந்தேக நபர், போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி டுபாய் செல்வதற்காக பெப்ரவரி 24 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

இதன்போது, குடிவரவு – குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, சந்தேகநபர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், ஹங்வெல்ல உணவகத்தின் உரிமையாளரின் கொலையின் பின்னர், தாம் பண்டாரகம, மில்லனிய மல்வத்த வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் பதுங்கியிருந்ததாக சந்தேக நபர் கைது செய்யப்படும் போது வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன்படி, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததில், “பூரு மூனா”வுக்கு அடைக்கலம் கொடுத்த வீட்டின் கணவன், மனைவி இருவரும் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.

பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் விளைவாக, தப்பியோடிய சந்தேக நபர் கணவன் மற்றும் மனைவி நுவரெலியா பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.

35 வயதுடைய சந்தேக நபர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. சந்தேக நபர், சம்பவத்தின் பின்னர் கடமைக்கு சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.