அவசர அறிவிப்பு; 15 நாட்கள் மட்டுமே அவகாசம்!!
மேல்மாகாணத்தில் இயங்கும் 50 வீதமான பயணிகள் போக்குவரத்து பஸ்களால் காற்று மாசுபாடு ஏற்படுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்செயலாக தெரிவு செய்யப்பட்ட கொழும்பு பஸ்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இவ்வாறான பேருந்துகளையும் வாகனங்களையும் தனித்தனியாக அடையாளம் காணும் வேலைத்திட்டம் நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் அடையாளம் காணப்பட்ட வாகனங்களின் வருவாய் உரிமம் கையகப்படுத்தப்பட்டு, குறைகளை நிவர்த்தி செய்ய 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும் என்றும், ஒரு மாதத்திற்கு மேலாக குறைகளை நிவர்த்தி செய்யாவிட்டால், வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பஸ்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் சுற்றுச் சூழல் மாசடைவதோடு, பொதுமக்களும் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாகவும், கடமையில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.