கியூபா விமானத்தில் பறவை மோதியதில் தீ: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!!
கியூபாவின் ஹவானா விமான நிலையத்தில் இருந்து புளோரிடாவுக்கு 3923 என்ற விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில், அந்த விமானத்தின் இன்ஜின் மற்றும் முகப்பு பகுதியில் பறவை ஒன்று மோதியது. அதனால் விமானத்தின் கேபினில் புகை பரவியது. அதிர்ச்சியடைந்த விமானி, கியூபாவின் ஜோஸ் மார்த்தி விமான நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து அந்த விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரையிறக்கினார்.
அதேநேரத்தில், விமானத்தின் முன்பகுதியில் தீ புகை வெளியேறிக் கொண்டே இருந்ததால், தீயணைப்பு படையினர் அந்த புகையை அணைத்தனர். இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. சம்பவம் நடந்த போது விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்திருந்தனர். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.