;
Athirady Tamil News

உத்தரபிரதேசத்தில் அதிரடி நடவடிக்கை- என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை!!

0

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் (மேற்கு) பகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜ்பால். பதவியேற்ற ஒரு மாதத்தில் இவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். விசாரணையில் தேர்தலில் அவரிடம் தோல்வி அடைந்த அஸ்ரப் என்பவர் இதில் தொடர்புடையவராக இருப்பது தெரியவந்தது. அஸ்ரப்பின் அண்ணன் அதிக் அகமது பிரபல தாதா ஆவார். ரவுடியான இவர், சமீபகாலமாக தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். அவரது தலைமையிலான ரவுடிகள்தான் ராஜ்பால் எம்.எல்.ஏ.வை சுட்டுக்கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, அதிக் அகமதும், அவரது சகோதரரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான அஸ்ரப் உள்பட 40 பேர் கைதாகி சிறையில் உள்ளனர்.

இவர்கள் மீதான குற்றச்சாட்டில் முக்கிய சாட்சியாக இருந்து வந்தார். கடந்த வாரம் உமேஷ்பால் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதிக் அகமதின் கும்பல்தான் அவரை கொன்றது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, பிரயாக் ராஜ் மாவட்டத்தில் போலீசார் நடத்திய வேட்டையில் குற்றவாளிகளில் ஒருவரான அர்பாஸ் என்பவன் சுட்டுக் கொல்லப்பட்டான். மற்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், முக்கிய சாட்சி உமேஷ்பாலை மிக அருகில் நின்று சுட்டுக்கொன்ற குற்றவாளியான விஜயக்குமார் என்ற உஸ்மான் சவுத்ரி பிரயாக் ராஜ் நகரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

நேற்று இரவு அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாருக்கும் ரவுடிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ரவுடி உஸ்மான் சவுத்ரி சுட்டுக் கொல்லப்பட்டான். இன்று அதிகாலை 5.30 மணிக்கு அவன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. உஸ்மான் பற்றி தகவல் தெரிவித்தால், ரூ.2.5 லட்சம் பரிசு தருவதாக உத்தரபிரதேசம் போலீசார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.