;
Athirady Tamil News

இந்தியாவில் மலிவு விலையில் சிகிச்சை அளிப்பது தான் அரசின் முதன்மை நோக்கமாகும்- பிரதமர் மோடி பேச்சு!!

0

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை திறம்பட அமல்படுத்த கருத்துகளையும், ஆலோசனைகளையும் பெறும் வகையில் 12 தலைப்புகளில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கை மத்திய அரசு நடத்தி வருகிறது. இதில் இன்று உடல்நலம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசினார். கொரோனா தொற்று போன்ற நெருக்கடியான சூழல் ஏற்படும் போதெல்லாம் வளமான நாடுகள் கூட வீழ்ச்சி அடைவதை நாம் பார்க்கிறோம். இதனால் உலகமே இப்போது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. இந்தியாவில் சுகாதார பாதுகாப்புடன் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தப்படுகிறது. கொரோனா தொற்று காலத்தின்போது மருந்து, மாத்திரைகள், தடுப்பூசி, மருத்துவ உபகரணங்கள் போன்றவை உயிர் காக்கும் ஆயுதங்களாக இருந்தது.

சுகாதாரத்துறையில் வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைக்க தொடர்ந்து மத்தியஅரசு முயற்சி செய்து வருகிறது. இந்தியாவில் மலிவு விலையில் மக்களுக்கு சிகிச்சை அளிப்பது தான் அரசின் முதன்மையான நோக்கமாகும். அரசு சுகாதார பாதுகாப்பில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. குடிமக்களின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே சிறந்த மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நாடு முழுவதும் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் தயாராகி வருகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதனால் மருத்துவ சிகிச்சைக்காக செலவிடப்ப டும் சுமார் 80 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டு உள்ளது. இந்தியா எந்த ஒரு தொழில் நுட்பத்தையும் இறக்குமதி செய்ய வேண்டியது இல்லை. இதில் தன்னிறைவு பெறுவதை நமது தொழில்முனைவோர்கள் உறுதிப்படுத்த வேண்டும். தொழில் முனைவோரை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.