மார்ச் 20 ஆம் திகதி இலங்கை சர்வதேச நாணய நிதியம் கையெழுத்திட உள்ளது!!
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட $2.9 பில்லியன் நான்கு வருட பிணையெடுப்பில் மார்ச் 20ம் திகதி இலங்கை கையெழுத்திடும் எனத் தெரிய வருகின்றது.
இலங்கை அதிகாரிகள் தீர்க்கமான கொள்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அவர்களின் முக்கிய கடன் வழங்குநர்களிடமிருந்து நிதி உறுதிமொழிகளைப் பெறுவதற்கும் அடைந்துள்ள முன்னேற்றத்தை நான் வரவேற்கிறேன். சீனா, இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் இற்கு எனது நன்றிகள். என சர்வதேச நாணய நிதியத்தின் தநிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.