லண்டனில் ராகுல் காந்தியிடம் கேள்வி கேட்ட ஆர்.எஸ்.எஸ். பிரமுகரின் மகள்!!
ராகுல்காந்தி நாடு முழுவதும் நடைபயணம் முடித்த நிலையில் தற்போது லண்டன் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். லண்டனில் சத்தம் ஹவுசில் நடந்த ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் லண்டனை சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரியான மாலினி நெஹ்ரா என்ற பெண் ராகுல்காந்தியிடம் கேள்வி எழுப்பிய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மாலினி நெஹ்ரா பேசுகையில், எனது நாட்டின் நிலை குறித்து நான் பரிதாபமாக உணர்கிறேன். எனது தந்தை ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதை பெருமையுடன் கூறுகிறேன்.
ஆனால் அவர் நாட்டை அங்கீகரிக்க மாட்டார். நாம் நமது ஜனநாயகத்தை மீண்டும் அதிகாரம் செய்வோம். தாங்கள் பிறந்து வளர்ந்த நாட்டை அங்கீகரிக்காத மில்லியன் கணக்கானவர்களில் தானும் ஒருவர் என்று ராகுல்காந்தியிடம் கூறினார். மேலும் அது நல்ல விஷயமா? அல்லது கேட்ட விஷயமா? என்று ராகுல் காந்தி கேட்டார். அதற்கு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் ஏன் இன்று இங்கே இருக்கிறேன்? நான் பரிதாபமாக உணர்கிறேன் என மாலினி நெஹ்ரா கூறினார்.
உங்கள் தந்தை ஆர்.எஸ்.எஸ்.சில் இருப்பதை பற்றியும், அவர் நாட்டை அங்கீகரிக்கவில்லை என்றும் நீங்கள் வெளிப்படுத்தும்போது இந்த உரையாடல் மிகவும் சக்தி வாய்ந்த விஷயமாக உள்ளது என்று ராகுல் காந்தி கூறினார். தொடர்ந்து மாலினியின் கேள்விக்கு ராகுல்காந்தி பதில் அளிக்கையில், நீங்கள் நிலை நிறுத்துகின்ற இந்திய மதிப்புகள் மற்றும் நீங்கள் பாதுக்காக்கும் மதிப்புகளை உங்களுக்கு சொல்வதன் மூலம் இந்தியா அதன் மதிப்புகளுக்கு செல்லும் என்றார்.