டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்த செய்தி உண்மையா?
இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, டொலரின் பெறுமதி உண்மையில் வீழ்ச்சியடைந்திருந்தால், அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும்.
இவற்றை நீக்கினால், டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து உள்ளதா இல்லையா என்பதை அறிய முடியும் என இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்தார்.
மேலும், இலங்கை ரூபாய் வலுவடைந்துள்ளதாக கூறினால் போதாது அதனை நடைமுறையில் காட்ட வேண்டும் எனவும் லியனாராச்சி தெரிவித்தார்.