இந்தியா உடனான உறவுக்கு முன்னுரிமை: சவுதி வெளியுறவு அமைச்சர் பேட்டி!!
சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் பர்ஹான் அல்-சவுத், ஓ.ஆர்.எஃப் நிறுவன தலைவர் சமீர் சரணுடனான நேர்காணலில் அளித்த பேட்டியில், ‘சவுதி – இந்தியா இடையிலான உறவு வேகமாக வளர்ந்து வருகிறது. பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. பிரதமர் மோடி மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு இடையிலான உறவுகள் வலுவாக உள்ளன.
இருவரும் முன்னேற்றத்தைக் காண விரும்புகிறார்கள்; இருநாட்டின் அரசும் தெளிவான பாதையில் செல்கின்றன. இந்தியாவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான உறவு கடந்த ஐந்து ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துள்ளது. உலகளவில் இந்தியாவின் வளர்ச்சியானது, மிகப்பெரிய ஆற்றல் கொண்ட நாடு மாறிவருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் திறன்மேம்பாடு அதிவேகமாக வளர்ந்துள்ளது.
சவூதி அரேபியாவில் பணியாற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்களால் எங்களது வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்கு முக்கியமாக உள்ளது. நீண்ட காலமாக இருநாடுகளுக்கும் இடையல் இருக்கும் உறவை, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்’ என்றார்.