சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்: கருப்பின பெண் வடிவில் பிரிட்டிஷ் பெண் விஞ்ஞானியை போன்று பார்பி பொம்மை அறிமுகம்!!
பார்பி பொம்மை வரிசையில் இப்போது கருப்பின பெண்ணின் பொம்மையும் இணைந்துள்ளது. பிரிடிஷ் விண்வெளி விஞ்ஞானி டாக்டர் மேகி அடெரின் போகாக்கை பிரதிபலிக்கும் வகையில் இந்த பார்பி பொம்மை புது வரவாக வந்துள்ளது. பொம்மைகள் குழந்தைகளின் தனி உலகம். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் தோழன். அதிலும் பார்பி பொம்மைகளோ எல்லோருக்கும் விருப்பமான பட்டியல்.
விதவிதமான பார்பி பொம்மைகள் உலகம் முழுவதும் அணி வகித்து வந்தாலும் இந்தாண்டு சர்வதேச மகளிர் தினத்தையொட்டி புதிதாக வந்துள்ளது பிரிட்டிஷ் பெண் விஞ்ஞானி டாக்டர் மேகி அடெரின் போகாக்கின் பொம்மை பெண் விஞ்ஞானியை போன்றே அச்சு அசலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கருப்பு நிறம் நட்சத்திர கூட்டத்தை நிறத்தை நீல நிற ஆடையுடன் தொலைநோக்கி என தயாரிக்கப்பட்டுள்ளது. பெண் விஞ்ஞானியின் தலை முடியை கூட அந்த பொம்மை பிரதி எடுத்துள்ளது. சிவப்பே அழகு என கட்டமைக்கப்பட்டு வரும் பிம்பங்களை அடித்து நொறுக்கி உள்ளது இந்த கருப்பு நிற பார்பி பொம்மை. அத்துடன் பெண்கள் மத்தியில் இந்த கருப்பு நிற பொம்மை புதிய நம்பிக்கையை விதைக்கும் என்பது நிச்சயம்.