விரைவில் வருகிறது ஊழல் ஒழிப்பு சட்டமூலம்!!
ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் முன்வைக்க இலங்கை எதிர்பார்ப்பதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் பொது நிதி முகாமைத்துவத்தை மேம்படுத்துவதன் ஊடாக, ஊழலுக்கு எதிரான வலுவான சட்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கையை வலியுறுத்தியுள்ளது.
தற்போது இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடன் உதவியை IMF வழங்குவது உறுதியாகியுள்ள நிலையில், விரைவில் ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தைக் கொண்டுவர அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடியுள்ளதாகவும், இந்த சட்ட மூலம் ஏற்கனவே நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் வரையப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன புதன்கிழமை தெரிவித்தார்.
எதிர்வரும் நாட்களில் இது நிச்சயமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.