ரஷ்யாவின் போருக்கு இடையே உக்ரைன் அதிபரின் மனைவி அரபு எமிரேட்ஸ் பயணம்!!
உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்நிலையில் உக்ரைன் அதிபரின் மனைவி ஓலேனா ஜெலன்ஸ்கா செவ்வாயன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றார். சர்வதேச மகளிர் தினமான நேற்று அபுதாபியில் நடந்த போர்ப்ஸ் 30/50 மாநாட்டில் ஓலேனா கலந்து கொண்டார். அங்கு பேசிய ஒலேனா ஜெலன்ஸ்கா, ‘‘நாங்கள் ஒரு சக்தியாக இருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து உலகை மாற்ற முடியும்.
உக்ரைனின் பெண்கள் மற்றும் ஆண்கள் புதிய சூழலுக்கு ஏற்ப மிக வேகமாக தங்களை மாற்றி மாற்றி வருகின்றனர். இதனால் எதிரிகளால் எங்களுக்கு புதிய சவால்களை கொண்டுவர முடியவில்லை” என்றார். மாஸ்கோ வழியாக செல்லாமல் நேரடியாக செல்லும் நாடுகளில் ஒன்றாக இருப்பதால் உக்ரைன் அதிபரின் மனைவி ஓலேனா ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ளார்.
மேலும் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து ஆதரவு அளித்து வருகின்றது.