உக்ரைனிய கண்ணிவெடிகளில் சிக்கி சிதறும் ரஷ்ய டாங்கிகள்!!
உக்ரைனிய படைகளின் கண்ணி வெடிகளில் சிக்கி ரஷ்ய படைகளின் பீரங்கி டாங்கிகள் வெடித்து சிதறும் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் போர் ஓராண்டு நிறைவை முன்னிட்டு ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன, முக்கிய கிழக்கு உக்ரைனிய நகரான பக்முட்-ஐ தற்போது சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதற்கிடையில் முற்றுகையிடப்பட்டுள்ள பக்முட் நகரை ரஷ்ய இராணுவம் கைப்பற்றினால், அவை கிழக்கு உக்ரைனுக்குள் நுழைய “திறந்த பாதை” இருக்கும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
சிதறும் ரஷ்ய டாங்கிகள்
இந்நிலையில் ரஷ்யாவின் 155வது டாங்கி படைப்பிரிவைச் சேர்ந்த டாங்கிகள், உக்ரைனின் வுஹ்லேடர் என்ற நகரை நோக்கி சென்று கொண்டு இருந்தன. அப்போது நகரின் சிறிய சாலையில் ரஷ்ய டாங்கிகள் சென்று கொண்டு இருந்த போது, உக்ரைனிய படைகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளில் சிக்கி வெடித்து சிதறின.
டாங்கிகள் இழப்பிற்கு அனுபவமற்ற வீரர்களே காரணம் என கூறப்படும் நிலையில், வுஹ்லேடர் நகரை எவ்வளவு விலை கொடுத்தாலும் கைப்பற்ற வேண்டும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு உத்தரவிட்டுள்ளார்.