;
Athirady Tamil News

மேஜர் ஜெனரலுக்கு பங்கேற்க தடை: ICPPG !!

0

இலங்கையின் மனித உரிமைகள் பதிவின் தற்போதைய மீளாய்வுக்கான அரசாங்கத் தூதுக்குழுவில் குற்றம் சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை நிறுத்துமாறு ICPPG ஐ.நா மனித உரிமைகள் குழுவிடம் வேண்டுகோள்

தற்போதைய இலங்கைக்கான மனித உரிமைகள் அமர்வில் போர்க்குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்ட மேஜர்

ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை தடை செய்யக்கோரி ஐ.நா மனித உரிமைகள் குழுவிடம் ICPPG வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சித்திரவதைக்குள்ளானவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தங்களைப் போன்ற சர்வதேச அரசு சார்பற்ற மனித உரிமைகள் அமைப்புக்களிற்கு மிகுந்த கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆணடு கார்த்திகை மாதம் 7ஆம் திகதி முதல் 2017 ஆம் ஆண்டு ஆடி மாதம் 27 ஆம் திகதி வரை குலதுங்க ஜோசப் முகாம் (SFHQ-W) தளபதியாக இருந்தார். இந்த காலகட்டத்தில் ஜோசப் முகாமில் சித்திரவதைக்கு ஆளான பலர் பிரித்தானியா மற்றும் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்றனர்.

சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ICPPG அவர் பங்கேற்பதை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறது. 2016 இல் குலதுங்கவின் முன்னோடியான சிசிர மென்டிஸ் சித்திரவதைக்கு எதிரான ஐ.நா குழுவிற்கு அனுப்பப்பட்டது போது பெலிஸ் கெயர் செய்ததைப் போல குறைந்தது அவரது பங்கு பற்றி அவரிடம் வினா எழுப்புமாறு ஐ.நா மனித உரிமைகள் குழுவை கோரியுள்ளதுடன் முன்னாள், தற்போதைய மற்றும் எதிர்கால குற்றவாளிகளுக்கு ஒரு தீவிரமான செய்தியை அனுப்புமாறும் கோரியுள்ளது. இது மற்றவர்கள் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபடுவதை தடுக்கும்.

ICPPG பணிப்பாளர் திருமதி அம்பிகை செல்வகுமார் குற்றஞ்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் குலதுங்க பங்கேற்பதை நிறுத்துமாறு அனைத்து புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் மற்றும் பிற மனித உரிமைகள் அமைப்புகளை ஒன்றிணைத்து ஐ.நாவை வலியுறுத்துமாறு அழைப்பு விடுத்ததுடன் இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமையை மீளாய்வு செய்வதற்கு எவ்வாறு ஐ.நா போர்க்குற்றவாளியை அனுமதிக்க முடியும்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.