ரஷிய போரால் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் இயங்கும் உக்ரைன் அணுமின் நிலையம்!!
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டை கடந்து நீடித்து வருகிறது. இதில் கிழக்கு உக்ரைனில் உள்ள சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் ராணுவம் போரிட்டு வருவதற்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்கும் பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது.
ராக்கெட் தாக்குதல்களின் விளைவாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜப்போரிழ்ழியா அணுமின் நிலையம் மற்றும் உக்ரேனிய மின் அமைப்புக்கு இடையேயான கடைசி தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், போரை தொடர்ந்து உக்ரைனில் உள்ள ஜப்போரிழ்ழியா அணுமின் நிலையத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், அதற்கு மாற்றாக, தற்போது டீசல் ஜெனரேட்டர்களில் அணுமின் நிலையம் இயங்குவதாகவும் அந்நாட்டின் அணுசக்தி ஆபரேட்டர் ஒருவர் தெரிவித்தார்.