;
Athirady Tamil News

இலங்கையின் இரண்டு முக்கிய இணையத்தளங்கள் ஹெக்?

0

இலங்கை மத்திய வங்கி மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் இணையத்தளங்கள் முடக்கப்பட்டு முக்கியமான தரவுகள் களவாடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இந்த இரண்டு இணையத்தளங்களும் முடக்கப்படவில்லை என்றும், மாறாக முடக்கப்படுவதற்கான எச்சரிக்கை மாத்திரமே வந்தத்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதியமைச்சின் முக்கிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி டெய்லிமிரர் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

கெல்வின் செக்கியூரிட்டி என்ற தரவு முகவர் ஒன்றின் ஊடாக, இலங்கையின் முக்கியமான இரண்டு இணையத்தளங்களின் கடவு அனுமதி உள்ளிட்ட தரவுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்படுவதாக, FalconFeeds.io மார்ச் 2ஆம் திகதி அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் ஒரு நாளுக்கு முன்னதாகவே குறித்த இணையத்தளங்கள் முடக்கப்படவுள்ளதாக தகவல் வழங்கியமைக்கு அமைய, அதனை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.