வர்ஜீனியா தேர்தலில் தமிழர் போட்டி!!
அமெரிக்காவின் மூத்த நிதி நிபுணரும், அமெரிக்கா வாழ் இந்தியருமான கண்ணன் சீனிவாசன் என்பவர் வர்ஜீனியா பிரதிநிதிகள் சபைக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா வாழ் இந்தியரான கண்ணன் சீனிவாசன் தமிழகத்தை சேர்ந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.
தற்போது வர்ஜீனியா மாநில மருத்துவக் குழுவில் துணைத் தலைவராக உள்ளார். இந்தநிலையில் வர்ஜீனியா பிரதிநிதிகள் சபை தேர்தலில் போட்டியிடப்போவதாக அவர் அறிவித்து உள்ளார். அவர் கூறுகையில்,’ கால் நூற்றாண்டு காலமாக எனது தாயகமாக விளங்கும் லூடவுன் கவுண்டியை பிரதிநிதித்துவப்படுத்த நான் மனுத்தாக்கல் செய்ய இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.