சிரியாவின் அலேப்போ விமான நிலையத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!!
இவ்வாரம் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளான சிரியாவின் அலேப்போ சர்வதேச விமான நிலையம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இவ்விமான நிலையம் இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளானது. அதன் ஓடுபாதை சேதமடைந்ததால், அலேப்போவுக்கு வரும் விமானங்கள் லடாக்கியா மற்றும் டமஸ்கஸ் நகர விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டன.
துருக்கியில் அண்மையில் ஏற்பட்ட பூகம்பத்தால் சிரியாவில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவிப்பொருட்களை விநியோகிப்பதற்கான விமான நிலையமாகவும் அலேப்போ விமான நிலையம் விளங்கியது.
இந்நிலைலயில் சேதங்கள் அனைத்தும் திருதப்பட்டதையடுத்து இன்று காலை முதல விமானநிலையத்தின் சேவைகள் மீண்டும் ஆரமபிக்கப்பட்டுள்ளதாக சிரிய போக்குவரத்து அமைச்சு அதிகாரியான சுலேய்மான் கலீல் தெரிவித்துள்ளார்.