துணிவு இருக்கு அண்ணாமலை! பணிவு இல்லையே…?- ப.சிதம்பரம் ஆதங்கம்!!
இளம் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்து பா.ஜனதா தலைவர் ஆனவர் அண்ணாமலை. அவ்வப்போது அதிரடியாக பேசி அரசியல் களத்தை அதிர வைப்பார். சமீபத்தில் எழுந்த வட மாநிலத்தவர்கள் பிரச்சினையில் அவர் மீது வழக்கு போடப்பட்டது. அதற்கும் அதிரடியாக ‘முடிந்தால் கைது செய்து பாருங்கள்’ என்று சவால்விட்டார். அடுத்த மாதம் பாத யாத்திரையை தொடங்க இருக்கும் அண்ணாமலை அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலையும் இணையதளத்தில் வெளியிடுவேன் என்று அறிவித்து எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார்.
ஆனால் அண்ணாமலையின் அரசியல் செயல்பாடுகளை கவனித்து வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ‘அண்ணாமலையிடம் துணிவு இருக்கும் அளவுக்கு பணிவு இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். பதவி வரும் போது பணிவு வர வேண்டும் தோழா என்று எம்.ஜி.ஆரும் அன்றே பாடியிருக்கிறாரே!