சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த 4 சீனர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை!!
கடந்த 2019-ல் டெல்லியில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டுக்கு பேருந்தில் தப்பிச் செல்ல முயன்ற 4 சீனர்கள், இந்திய – நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள் நால்வருக்கும் உத்தராகண்ட் மாநில சம்பாவத் மாவட்ட நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.45,000 அபராதமும் விதித்துள்ளது. நால்வரையும் அழைத்துச் சென்ற நேபாளி ஒருவரும் கைது செய்யப்பட்டார். அவர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். சீனர்கள் நால்வரும், ரூ.6.78 கோடி மதிப்புள்ள தங்கம், ரூ.13 கோடி மதிப்புள்ள வெள்ளி கடத்தி வந்த போது மும்பையில் கைது செய்யப்பட்டனர்.
அப்போது அவர்களுடைய பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜாமீனில் வெளியில் வந்த பிறகு நேபாளி மூலம் நேபாளத்துக்கு தப்பி செல்ல முயன்றுள்ளனர்.