இஸ்ரேலில் வரலாறு காணாத புரட்சி – சட்ட மசோதாவிற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு !!
இஸ்ரேல் நாட்டில் நீதித்துறையில் அரசு செய்த மாற்றங்களுக்கு எதிராக நாடு முழுதும் வரலாறு காணாத புரட்சி நடைபெற்று வருகிறது.
இஸ்ரேல் நாட்டில் புதிதாக இயற்றப்பட்ட நீதித்துறை தொடர்பான சட்ட மசோதாவிற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நீதித்துறை மறுசீரமைப்பு சட்ட மசோதாவின் படி அரசு நியமிக்கும் ஒன்பது பேர் கொண்ட குழுக்கள் மூலமாக, உச்சநீதிமன்றத்தைத் தவிர மற்ற நீதிமன்றத்தின் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதாகும்.
இச்சட்டத்தினால் மக்களின் ஜனநாயகம் பெரிதும் பாதிக்கப்படும் என்றும், இது நீதியைச் சிதைக்கும் திட்டம் எனக்கூறி மக்கள் அந்த மசோதாவிற்கு எதிராக போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
நீதித்துறை மறுசீரமைப்பு சட்ட மசோதா வலதுசாரிகள் தீர்மானிக்கும் நீதி ஆகிவிடும் எனக்கூறும் மக்கள் அதற்கு எதிராக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வரலாறு காணாத புரட்சி இஸ்ரேலின் முக்கிய தலைநகரான ஹைஃபா போன்ற நகரங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.
இந்த சீர்திருத்தங்கள் ஜனநாயகத்தை குழிபறிக்கும் என விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாஹீவின் தலைமையிலான அரசாங்கம் இந்த மசோதா நாட்டின் சீர்திருந்ததிற்கு அவசியமானது என வாதிடுகிறது.
கடந்த 10 நாளாக நாடு முழுவதும் நடந்து வரும் இந்த போராட்டத்தில் 5 லட்சத்திற்கும் மேல் மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
“இஸ்ரேல் நாட்டின் வரலாற்றில் இது மிகப்பெரிய போராட்டம்” என அந்நாட்டின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். பயங்கரவாத அலை நம்மைத் தாக்குகிறது, நமது பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது, பணம் நாட்டை விட்டு வெளியேறுகிறது.
ஈரான் நேற்று சவுதி அரேபியாவுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் இந்த அரசாங்கம் இஸ்ரேலின் ஜனநாயகத்தை நசுக்குவதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது,” என்று எதிர்க்கட்சி தலைவர் லயர் லபிட் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.