;
Athirady Tamil News

எனக்கும், பாஜகவுக்கும் கல்லறை தோண்டுவதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது- பிரதமர் மோடி!!

0

பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் கர்நாடகாவுக்கு வந்தார். அங்கு அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரூ.8 ஆயிரத்து 480 கோடியில் தேசிய நெடுஞ்சாலை எண்.275ல் பெங்களூரு- மைசூரு இடையே 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள 10 வழிச்சாலையை மண்டியா மாவட்டம், மத்தூரில் இருந்து பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து மைசூரு- குசால்நகர் இடையே 4 வழிச்சாலை திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் தார்வாருக்கு சென்றார். அங்கு நடைபெறும் விழாவில் தார்வார் ஐ.ஐ.டி. நிறுவன கட்டிடத்தை திறந்து வைத்தார்.

நடைமேடை சித்தரோட சுவாமி உப்பள்ளி ரெயில் நிலையத்தில் 1,507 மீட்டர் தூரத்திற்கு நடைமேடை ரூ.20 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஒசப்பேட்டை, உப்பள்ளி-டினைகாட் இடையேயான பாதை மின்மயம் ஆக்கப்பட்டுள்ளது. இது ரூ.530 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் நல்ல தொடர்பு வசதி ஏற்படும். ஒசப்பேட்டே ரெயில் நிலையம் ஹம்பி பாரம்பரிய சின்னத்தை போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அங்கு அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து உப்பள்ளி சீர்மிகு நகர திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இந்த திட்ட பணிகளின் மதிப்பு ரூ.520 கோடி ஆகும். மேலும் பிரதமர், ஜெயதேவா இதய நோய் ஆஸ்பத்திரி, ஆராய்ச்சி மையத்துக்கு அடிக்கல் நாட்டினார். இது ரூ.250 கோடியில் நிறுவப்படுகிறது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மண்டியா மற்றும் உப்பள்ளி, தார்வாரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- உங்களின் அன்பிற்கு இரட்டை எஞ்சின் அரசு மாநில வளர்ச்சியை திருப்பி அளிக்கிறது. கடந்த சில நாட்களாக மக்கள் எக்ஸ்பிரஸ் சாலை குறித்து பேசுகின்றனர்.

எக்ஸ்பிரஸ் சாலையின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த திட்டத்தால் நாட்டு இளைஞர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மோடிக்கு கல்லறை தோண்டவேண்டுமென காங்கிரஸ் கனவு காண்கிறது. மோடிக்கும், பாஜகவுக்கும் கல்லறை தோண்டுவதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. ஆனால், பெங்களூரு-மைசூரூ நெடுஞ்சாலை அமைப்பதில் மோடி தீவிரமாக இருந்தேன். மோடி எளிய மக்களின் வாழ்க்கையை உயர்த்திக்கொண்டிருக்கிறேன். மக்களின் நம்பிக்கையே எனது கேடையம். கர்நாடகாவை வளர்ச்சியடையவைப்பதில் நான் தீவிரமாக உள்ளேன். எளிய மக்களுக்கான பணத்தை காங்கிரஸ் கொள்ளையடித்துக்கொண்டிருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.