போராட்டங்களில் ஈடுபட்டோருக்கு அரச தொழிலோ பதவி உயர்வோ இனி கிடையாது!!
அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு அரச தொழிலோ அல்லது பதவி உயர்வோ வழங்காமலிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரச பணிகளுக்கு விண்ணப்பிப்போர் மற்றும் அரச பணிகளில் உள்ளோருக்கு பதவி உயர்வு வழங்கும் போது, அவர்களது பின்னணி குறித்து ஆராயப்படும்.
இதன்போது அவர்கள் அரச எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுட்டார்களா? என்பது குறித்தும் ஆராயப்படும்.
அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகளின் பரிந்துரைகள் மற்றும் புலனாய்வுத் துறையின் அறிக்கைகளின் அடிப்படையில் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக சண்டே ஒப்சேர்வர் செய்தி வெளியிட்டுள்ளது.
அரச சேவையில் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களில் சிலர் கூட அரச விரோதமாகவும் மறைமுகமாக அரச கட்டமைப்புக்கு இடையூறு விளைவிக்கும் மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருப்பதாக அந்த அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.