பிளஸ் 2 பொதுத்தேர்வு: முதல் நாளில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்!!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மொழி பாடத்தேர்வு நடைபெற்றது. அதில் மொத்தம் விண்ணப்பித்துள்ள 8 லட்சத்து 51 ஆயிரம் மாணவர்களில் 50, 674 பேர் முதல் நாளில் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. தேர்வுத்துறை அதிகாரிகள் கூறும்போது, வழக்கமாக 4 முதல் 5 விழுக்காடு மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வின் போது ஆப்சென்ட் ஆவது வழக்கமான ஒன்றுதான் இதில் அதிர்ச்சி அடைவதற்கு ஒன்றுமில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இருந்தாலும் 8 லட்சம் மாணவர்களில் 50 பேர் தேர்வு எழுதவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி வரக்கூடிய தேர்வுகளில் இதே அளவு ஆப்சென்ட் இருக்குமா? என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்பது அதிகாரிகளுடைய வேண்டுகோளாகவும் இருக்கிறது.