ஏப்ரலில் தேசிய பௌதீகத் திட்டம் !!
தேசிய பௌதீகத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இறுதி ஒப்புதலுக்காக ஏப்ரல் மாதம் சமர்ப்பிக்கப்படும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
“தேசிய பௌதீக திட்டம்-2048” தயாரிப்பது தொடர்பாக பத்தரமுல்லை, செத்சிறிபாயவிலுள்ள தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்கள கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் அனுமதி கிடைத்த பின்னர் தேசிய பௌதீக திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அது வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் தேசிய பௌதீகத் திட்டம் பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்றத்தின் அமைச்சின் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முதலாவதாக இந்நாட்டில் 2007 இல் தேசிய பௌதீகத் திட்டம் தயாரிக்கப்பட்டது. பின்னர் அது 2019 இல் புதுப்பிக்கப்பட்டது. தேசிய பௌதீகத் திட்டம் – 2048ன் கருப்பொருள் “ஒரு திட்டமிடப்பட்ட நிலை பேறான வளமான தேசம்” என்பதாகும்.
தேசிய பௌதீகத் திட்டங்கள் பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அறிஞர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை எடுத்துக்கொண்டு தயாரிக்கப்படுகின்றன. தற்போது தயாரிக்கப்பட்டு வரும் தேசிய பௌதீகத் திட்டம், அமைச்சின் செயலாளர்கள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டு அவர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.
இந்த தேசிய பௌதீக திட்டம் தற்காலத்திற்கு ஏற்றவாறு புதுப்பிக்கப்பட வேண்டுமெனவும்
புதுப்பித்தலுக்காக குறிப்பிட்ட காலக்கெடுவை அமைக்கவும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபடும் நிறுவனங்களை ஒருங்கிணைப்பதில் தாமதம் ஏற்படுவதால், அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதுடன், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், சாங்கம் மாறும்போது, தேசிய திட்டங்களில் ஏற்படும் மாற்றம், நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. இது நாட்டின் வளர்ச்சிக்கும் தடையாக உள்ளது.
எவ்வாறாயினும், தேசிய பௌதீக திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கொள்கைகள் மற்றும் திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் அபிவிருத்தி திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக அமையும் எனவும் மக்களின் தேவைகள் நிவர்த்தி செய்யப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.