செய்தியாளர் சந்திப்பில் இருந்து பாதியில் வெளியேறினார் அதிபர் ஜோ பைடன்!!
அமெரிக்காவில் வங்கிகளின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகின்றன. அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி (எஸ்விபி) சமீபத்தில் திவாலானது. இதனால் அமெரிக்க பங்குச்சந்தையில் வங்கிகளின் பங்கு மதிப்பு கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. இதையடுத்து, திவாலான வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை மீட்க அமெரிக்க நிதி அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.
இந்நிலையில், இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், வங்கி தோல்விக்கு காரணமானவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஜோ பைடனிடம், வங்கிகள் சரிவைச் சந்திருக்கின்றன….. என்ன நடந்தது என்பது குறித்து விளக்கமாகக் கூறமுடியுமா… இதனால் எந்த விளைவும் ஏற்படாது என அமெரிக்கர்களுக்கு உறுதியளிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார். இதனால் அதிபர் ஜோ பைடன் பாதியிலேயே பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து வெளியேறினார்.