உக்ரைன் போரில் களமிறங்கும் பெண் சிறைக் கைதிகள்..!
ஆண் ராணுவ வீரர்களின் கடுமையான இழப்புகளுக்கு பிறகு, பெண் சிறைக் கைதிகளை போரின் முன்வரிசைக்கு ரஷ்யா அனுப்புவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் தொடங்கி ஓராண்டை கடந்து இருக்கும் நிலையில், இந்த தாமதம் ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அத்துடன் ஒரு பக்கம் ராணுவ வீரர்களின் அதிகப்படியான உயிரிழப்புகள், மறு பக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் ஆயுத பற்றாக்குறை போன்றவை ரஷ்யாவை தொடர்ந்து நெருக்கடிக்குள் தள்ளி வருகிறது.
இதற்கிடையில் ராணுவ வீரர்களின் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்ய சிறைக் கைதிகளை போர் களத்தின் முன்வரிசைக்கு அனுப்பி வருகிறார்.
இவ்வாறு போரில் களமிறங்குவதற்காக அவர்களின் சிறைத் தண்டனை குறைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள அறிக்கைகளின் அடிப்படையில், கடந்த வாரம் டொனெட்ஸ்க் பகுதியை நோக்கி கைதிகளை ஏற்றிச் செல்வதற்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளை கொண்ட தொடருந்து ஒன்று பயணித்தது என தெரியவந்துள்ளது. அத்துடன் அதில் தண்டனை பெற்ற பெண் சிறைக் கைதிகள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதன்மூலம் போரின் முன்வரிசையில் ஆண் ராணுவ வீரர்களின் கடுமையான இழப்புகளுக்கு பிறகு, ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனுடன் போரிட பெண் கைதிகளை அனுப்பி வைப்பதாக கருதப்படுகிறது.
மேலும் இதற்காக கிரெம்ளின் பெண் குற்றவாளிகள் போர் மண்டலத்திற்கு அருகில் உள்ள கிராஸ்னோடர் பகுதிக்கு மாற்றியதாக நம்பப்படுகிறது.