;
Athirady Tamil News

ஏழு நிமிடங்களில் முழு சார்ஜ் – 260 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் அறிமுகம்!!

0

இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய 260 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 110 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட்சார்ஜ் வசதியையும் அறிவித்து இருக்கிறது. இவற்றை “ஆல்-ரவுண்ட் ஃபாஸ்ட்சார்ஜ்” என இன்ஃபினிக்ஸ் அழைக்கிறது. பயனர்களுக்கு இது பாதுகாப்பான மற்றும் ஸ்மார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் அனுபவத்தை வழங்குகிறது. 4400 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனினை 260வாட் ஆல்-ரவுண்ட் ஃபாஸ்ட்சார்ஜ் 7.5 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.

மேலும் ஒரே நிமிடத்தில் 25 சதவீதம் வரை சார்ஜ் ஏற்றிவிடும். புதிய ஃபாஸ்ட்சார்ஜ் தொழில்நுட்பத்தில் உள்ள சார்ஜிங் ஆர்கிடெக்ச்சர் 4-பம்ப் இண்டெலிஜண்ட் சர்கியுட் டிசைன் கொண்டிருக்கிறது. இது மின் தேவையை கண்டறிந்து அதற்கு எத்தனை பம்ப்கள் தேவை என்பதை பொருத்து சார்ஜ் பம்ப்களை இயக்க செய்கிறது. இதில் உள்ள மேம்பட்ட 12C ஹை ரேட், 4400 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் மல்டி-எலெக்ட்ரோட் லக் கட்டமைப்பு அதிகபட்சம் 98.5 சதவீத சார்ஜிங்கை செயல்படுத்துவதோடு, பேட்டரி திறனை அதிகரிக்கிறது. ஆயிரம் முறை பேட்டரியை சார்ஜ் செய்த பின்பும் 90 சதவீத திறன் அப்படியே இருக்கும் என இன்ஃபினிக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த சார்ஜரில் மூன்று GaN மெட்டீரியல் PFC + AHB சர்கியூட் ஆர்கிடெக்ச்சர் உள்ளது. இது அதிக திறன், சிறிய அளவில், சேஃப் சார்ஜிங் கண்ட்ரோல் கொண்டிருக்கிறது. இதன் சார்ஜிங் கேபிளில் புதிய இண்டர்ஃபேஸ் ஸ்டிரக்ச்சர் டிசைன் உடன் இமார்கர் ஐடெண்டிஃபிகேஷன் சிப் கொண்டுள்ளது. இது அதிகபட்சம் 13A வரையிலான கரண்ட்-ஐ கடத்தும். இதில் இன்ஃபினிக்ஸ் நிறுவனத்துடன் பிரத்யேக ஃபாஸ்ட் சார்ஜிங் ப்ரோடோகால் கொண்டிருக்கிறது. இது 260 வாட் அதிவேக ஃபாஸ்ட் சார்ஜிங்கை சாத்தியப்படுத்துகிறது. இதனுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் 110 வாட் வயர்லெஸ் ஆல்-ரவுண்ட் ஃபாஸ்ட்சார்ஜ் 16 நிமிடங்களில் சாதனத்தை முழுமையாக சார்ஜ் செய்கிறது. இதில் பிரத்யேக அளவில் சிறிய சென்சிடிவ் காயில்கள் உள்ளன.

வழக்கமான காயில்களில் உள்ளதை விட குறைந்த காயில்கள், ஒரே அளவில் அகலமான காயில்களை கொண்டிருக்கின்றன. இந்த சார்ஜ் ஸ்டேஷனில் சைலண்ட் ஏர் கூலிங் வழங்கும் ஃபேன் வழங்கப்பட்டு இருக்கிறது. இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஆல்-ரவுண்ட் ஃபாஸ்ட்சார்ஜ் வயர்டு மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்குகிறது. இத்துடன் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங், பைபாஸ் சார்ஜிங், மல்டி-ப்ரோடோால் சார்ஜிங் வசதியும் உள்ளது. வயர்டு மற்றும் வயர்லெஸ் டூயல் ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் இது தலைசிறந்த சார்ஜிங் அனுபவத்தை வழங்குகிறது. புதிய ஆல்-ரவுண்ட் ஃபாஸ்ட்சார்ஜ் தொழில்நுட்பம் இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கிறது. புதிய இன்ஃபினிக்ஸ் நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.