QR முறை பயனற்றது!!
கடந்த காலத்தில் டீசல் பயன்பாடு 54%, பெட்ரோல் பயன்பாடு 35% மற்றும் மண்ணெண்ணெய் பயன்பாடு 75% குறைந்துள்ளது என்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
மேலும், 2022ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் 2023ஆம் ஆண்டு ஜனவரிக்கு இடையிலான காலப்பகுதியில் எரிபொருள் நுகர்வின் சரிவு கடுமையான பொருளாதார சுருக்கத்தை பிரதிபலிக்கிறது என்றும் அவர் தனது ட்விட்டர் கணக்கில் கூறியுள்ளார்.
ரேஷன் முறையின் ஊடாக வழங்கப்படும் எரிபொருளை தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின்(QR) ஊடாக கூட மக்களால் கொள்வனவு செய்ய முடியாத நிலையில் தொடர்ந்தும் எரிபொருள் அனுமதிப்பத்திர முறையை நடைமுறைப்படுத்துவது வீண் என்று தனது ட்விட்டர் கணக்கில் கூறியுள்ளார்.