;
Athirady Tamil News

ஒருபுறம் பேய் மழை; மறுபுறம் பனிப்புயல்: அமெரிக்காவை தொடர்ச்சியாக மிரட்டும் இயற்கை சீற்றங்களால் மக்கள் அவதி..!!

0

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தொடரும் இயற்கை சீற்றங்களால் கலிபோர்னியா மாகாண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த ஒரு வாரமாகவே கனமழை பெய்து வருகிறது. ஒரு சில மாகாணங்களை பனிப்புயல் தாக்கியதால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வாஷிங்டன் கவுன்டியில் கடந்த சில நாட்களாகவே பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மூவரில் ஒருவர் உயிருடனும், இன்னொருவர் சடலமாகவும் மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு நபரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். கலிபோர்னியா மாகாணத்தின் ஒருபுறம் பேய் மழை கொட்டி வரும் நிலையில், வடகிழக்கு பகுதிகளில் பனிப்புயல் தாக்கியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நீடிக்கும் கனமழையால் ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அங்குள்ள ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் ஹெலிகாப்டருடன் உயிருடன் மீட்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.