சீனா, ரஷ்யா, ஈரான் கூட்டு ராணுவ பயிற்சி!!
சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஓமன் வளைகுடா பகுதியில், ரஷ்யா, ஈரான் மற்றும் சீனா ஆகியவை இணைந்து இந்த வாரம் கூட்டு கடல் பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.
இந்த 3 நாடுகளும் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளன. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு எதிரான விமர்சனங்களை வெளிப்படுத்த சீனா மறுத்து வருகிறது. சீனாவுக்கு எதிராக பல்வேறு விஷயங்களில், அமெரிக்கா எதிரான நிலைப்பாட்டை கொண்டு உள்ளது.