;
Athirady Tamil News

90 வீதமான மாணவர்களின் கல்வி அறிவு பாதிப்பு!!

0

இலங்கையிலுள்ள அரச பாடசாலைகளில் மூன்றாம் வகுப்பு குழந்தைகளில் சுமார் 90 சதவீதம் பேர் போதிய கல்வியறிவு அல்லது அல்லது எண்களைப் பற்றிய அறிவைப் பெற முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கொரோனா காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டதால் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளன கல்வி பாதிப்பு குறித்து கல்வி அமைச்சு அண்மையில் விசேட ஆய்வு நடத்தப்பட்டது.

அதன்படி, 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி வரையிலான காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல், எண்கள் மற்றும் அடிப்படை கணித அறிவு உள்ளிட்ட பல துறைகளில் இவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது, 90 சதவீத மாணவர்கள் போதிய கல்வியறிவு அல்லது எண்கள் பற்றிய அறிவைப் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த கணக்கெடுப்பிற்கு நாட்டின் ஒவ்வொரு மாகாணத்தையும் உள்ளடக்கிய ஆயிரத்து 9 பாடசாலைகளில் இருந்து 3 ஆம் வகுப்பு படிக்கும் சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.