ஜி.என்.செட்டி சாலையில் போக்குவரத்து மாற்றம்- போலீஸ் பாதுகாப்பு!!
கும்பாபிஷேகத்தையொட்டி தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் இன்று அதிகாலையில் இருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வள்ளுவர் கோட்டம், வாணிமகால், பனகல் பார்க் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.என்.செட்டி சாலையில் செல்ல அனுமதி இல்லை. அதே போல ஜெமினிபாலம், அண்ணாசாலையில் இருந்து ஜி.என்.செட்டி சாலைக்கு வரும் வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மேம்பாலத்தை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது.
பத்மாவதி தாயாரை காண கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகனத்தில் நேரடியாக கோவிலுக்கு வர இயலாது. எங்காவது வாகனத்தை நிறுத்திவிட்டு தான் வரமுடியும். ஜி.என்.செட்டி மேம்பாலம் கீழ்பகுதி மற்றும் கோவிலில் நெரிசல் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.