கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பழங்களின் வரத்து அதிகரிப்பு!!
கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பழங்கள் கொண்டு வரப்படுகின்றன. கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் பழங்கள் ஜூஸ் விற்பனை அதிகரித்துள்ளது. நீர்ச்சத்துள்ள பழங்களை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்ற சிறப்பு பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இருந்து தினமும் 10-க்கும் மேற்பட்ட மினி லாரிகளில் சாத்துக்குடி பழங்கள் கொண்டு வரப்படுகின்றன.
மகாராஷ்டிராவில் இருந்து ஆரஞ்சு, திராட்சை, மாதுளை உள்ளிட்ட பழங்களின் வரத்தும் உள்ளன. கோடைகால பழங்களான தர்பூசணி, கிர்ணி உள்ளிட்டவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி ஆந்திரத்தில் இருந்து தினமும் 15-க்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டுவரப்படுகின்றன. மொத்த விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ சாத்துக்குடி ரூ.40 முதல் 60 வரையிலும், ஆரஞ்சு ரூ.60 முதல் ரூ.100 வரையிலும், திராட்சை ரூ.40 முதல் ரூ.50-க்கும், தர்ப்பூசணி ரூ.15 முதல் 20-க்கும், கிர்ணி பழம் ரூ. 20 முதல் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.