சென்னையில் சாலைகள் மறுசீரமைப்பு பணி தீவிரம்!!
சென்னை மாநகராட்சியில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.124.71 கோடியில் 204.82 கி.மீ. தொலைவுக்கு பேருந்து மற்றும் உட்புறச்சாலைகள் உள்பட 1,157 சாலைகளை சீரமைக்கும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், நகர்ப்புறச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.151 கோடியில் 221.88 கி.மீ. நீளத்தில் 1408 சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இப்பணிகளை தொடர்ந்து கண்காணிக்க மாநகராட்சி ஆணையர் தலைமையில் அலுவலர்கள், பொறியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதனடிப்படையில் மணலி, ராயபுரம், வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி மண்டலப் பகுதிகளில் உள்ள 19 இடங்களில் பழைய சாலைகள் முழுவதுமாக அகழ்ந்தெடுத்தல், குழாய் பொருத்துதல், தார்க்கலவை, கான்கிரீட் கலவை போடுதல் மற்றும் வெட்டப்பட்ட சாலையை மறுசீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.